news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய டிரான்ஸ்ஃபார்மர் பொருத்தப்படவில்லை எனப் புகார்
tv

Also Watch

tv

Read this

புதிய டிரான்ஸ்ஃபார்மர் பொருத்தப்படவில்லை எனப் புகார்

சுமைதாங்கி, ராணிப்பேட்டை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விவசாயிகள் அவதி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சுமைதாங்கி கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு விவசாயிகள் விவசாயம் செய்வதற்காக மூலதனமாக உதவும் மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதாகி இருப்பதாக கூறி மின்சாரத்துறை அதிகாரிகள் அதனை அகற்றிச் சென்ற நிலையில்.

கடந்த இரண்டு மாதங்களாக டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாததால் சுமைதாங்கி சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஏராளமானோர் விவசாயம் செய்து வரும் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர் மேலும் மின்சார டிரான்ஸ்பார்மர் இல்லாததால் விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல்.

மோட்டார் பம்புகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் 50 ஏக்கர் விளைநிலங்கள் முழுவதும் வறண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளன பல லட்சம் ரூபாய் செலவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.


மேலும் இதுகுறித்து பலமுறை மின்சாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், பழுதாகி இருப்பதாக கூறி எடுத்து சென்ற டிரான்ஸ்பார்மரை இதுவரையில் பொருத்தப்படாததால் விவசாயிகள் கடும் மனவேதனையில் உள்ளனர் விவசாயமே வாழ்வாதாரமாக உள்ள நிலையில் பயிர்கள் காய்ந்து வருவதால் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், "நாங்கள் உயிரிழந்த பிறகுதான் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? எங்களின் நிலைமையை தமிழக அரசு உடனடியாக கவனிக்க வேண்டும் அதேபோல் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு டிரான்ஸ்பார்மரை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில் எங்களின் விவசாயமும், வாழ்க்கையும் முழுமையாக அழிந்துவிடும்" என்று விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, சுமைதாங்கி கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை அவசரமாக நிறுவி, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு மற்றும் துறை சார்ந்த அமைச்சர் மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Link
கேட்டரிங் கல்லூரி மாணவரை தாக்கிய திருநங்கை

கேட்டரிங் கல்லூரி மாணவரை தாக்கிய திருநங்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாலை சேதமடைவதால் லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்

3
1 hr 1 min agoshare
லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau