news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம்
tv

Also Watch

tv

Read this

ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம்

பொன்னேரி, திருவள்ளூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒப்பந்த ஊழியர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், தமிழ்நாடு அரசு தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கஜா, வர்தா என ஆண்டுதோறும் புயல் காலங்கள், மழை, வெள்ளம் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் உயிரைத் துச்சம் என நினைத்து மக்களுக்கு மின்சாரம் கிடைத்திடும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாகவும், குறைந்த ஊதியத்தில் தங்களால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையில் ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததை கண்டித்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தினர்.

மின்வாரியத்தில் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அரசு இதனை கவனத்தில் கொண்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Related Link
சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயில் ஆனி விழா விமரிசை

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயில் ஆனி விழா விமரிசை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாலை சேதமடைவதால் லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்

0
2 mins agoshare
லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau