Also Watch
Read this
By: Web Team

ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று மாலை நான்கு மணியிலிருந்து ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய மழை பெய்தது.
பனி மூட்டத்தால், சிறிது தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.
குறைந்த அளவே வந்திருந்த சுற்றுலா பயணிகள், இந்த குளிர்ச்சியான சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved