Also Watch
Read this
உத்திரமேரூர் தொகுதியில் தோல்வியைத் தழுவிய பாமக வேட்பாளரை பார்த்து, சௌமியா அன்புமணி கண்ணீர் விட்டு அழுதது, சோகத்தை ஏற்படுத்தியது.

தோல்வியடைந்த உத்திரமேரூர் பாமக வேட்பாளர்
உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், பாமக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மகேஷ்குமார் தோல்வி அடைந்தார். இந்நிலையில், தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்ற சௌமியா அன்புமணி சென்னை சென்றபோது, அவருக்கு காஞ்சிபுரத்தில் பாமக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மகேஷ்குமாரை பார்த்த சௌமியா அன்புமணி, மனம் தாங்காது கதறி அழுதார். பதிலுக்கு "இந்த பாசமே போதும் அண்ணி" என மகேஷ்குமார் உருக்கத்துடன் தெரிவித்தார்.

உத்திரமேரூர் தொகுதியில் பாமக
பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 18 தொகுதிகளில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பெ.மகேஷ்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே இவர் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்ட போதும், 2021ல் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்த போதும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் களம் கண்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் இம்முறை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மகேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, போட்டியிட்டார். அவர் இந்த முறையும் தோல்வியை தழுவினார். தவெக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved