Also Watch
Read this
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரை சந்தித்த விஜய்
தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை பிற்பகல் 3.30 மணி அளவில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். விஜய்யை வரவேற்ற ஆளுநர் அர்லேகர், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

நாளை பதவி ஏற்பு
பதவியேற்பு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை காலை 11.30 மணி அளவில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. முதல்வராக விஜய் நாளை பதவி ஏற்கிறார்.
விஜய் அமைச்சரவை
விஜய் உடன் தவெக எம்எல்ஏக்களும், அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அமைச்சரவையில் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், மரிய வில்சன், ராஜ்மோகன், அருண்ராஜ், சத்தியபாமா, விஜயலட்சுமி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved