Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் விளை நிலங்களில் குளம் போல் தேங்கி இருக்கும் ஊற்று நீரால் வாழை மரங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
பொன்னாவரை பகுதியில் சுமார் நூறு ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கல்யாணி வடிகால் வாய்க்கால் ஊற்று நீர் வெளியேற வழியின்றி விளை நிலங்களில் தேங்கியுள்ளது.
பல வருடங்களாக வடிகால் தூர் வாரப்படாததே இதற்கு காரணம் என கூறும் விவசாயிகள் வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved