Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஸ்ரீ வாராகி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை நான்காம் கால யாக பூஜைகள் தொடங்கிய பின் நாடி சந்தனம், ரக்ஷா பந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி பரிவார விமான கலசத்திற்கும், ஆகாய கங்கை சிவன் மற்றும் வாராகி அம்மன் உள்ளிட்ட விமான கோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved