Also Watch
Read this
By: Web Team

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில், கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த தவறி விட்டது விருத்தாசலம் நகராட்சி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில், தெருவிற்கு சுமார் 10 நாய்கள் என நகராட்சியின் 33 வார்டுகளின் தெருக்களிலும், பொது இடங்களிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள், வயதானவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் என அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுவர் முதல் பெரியவர் வரை பாரபட்சமின்றி ஒரே நாய் 10 நபர்களை கடித்ததில், அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும்
குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாய்களின் அச்சுறுத்தல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved