Also Watch
Read this
By: Web Team

அரசு சார்பில் வழங்கப்படும் எந்த சலுகையும், ஆதி மருத்துவ சமூக மக்களுக்கு வழங்கப்படவில்லை என கூறி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி இளைஞர் ஊர்மக்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். வாணியம்பாடி அருகே சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்த 64 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. போராட்டம் நடத்தியவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved