news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் வென்று சாதனை
tv

Also Watch

உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

திருப்பூர்

4

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tpt 01

மலேசியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியைச் சேர்ந்த ஆராதனா மற்றும் அத்விக் வைபவ் ஆகியோர் மலேசியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சவுதி அரேபியா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 36 அணிகளில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி ஆராதனா தொடுதிறன் பிரிவில் தங்கப் பதக்கமும், குத்து வரிசை பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

நான்காம் வகுப்பு மாணவர் அத்விக் வைபவ் குத்து வரிசை மற்றும் தொடுதிறன் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். சர்வதேச அளவிலான போட்டியில் பதக்கங்கள் வென்று உடுமலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை சிலம்பம் ஆசான்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி - தடுத்து நிறுத்திய விவசாயிகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved