news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி - தடுத்து நிறுத்திய விவசாயிகள்

திருப்பூர்

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tpr 01

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் கோவை இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை எண்ணை குழாய் பதிக்கப்படுகிறது. 340 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலத்தடியில் குழாய்கள் அமைத்து எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் இதில் இருகூரிலிருந்து முத்தூர் வரை 70 கிலோமீட்டர் தூரம் விளைநிலங்கள் வழியாக பாதை அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காங்கேயம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக கிரேன், பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.


இது பற்றி தகவல் அறிந்ததும் காங்கேயம், வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அங்கு வந்தனர் பின்னால் குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சாலையோரமாக குழாய் பதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதோடு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்

அப்போது குழாய் பறிக்கும்போது தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்களும் அளிக்கப்படுகிறது. நிலத்தின் பயன்பாடு உரிமை விதிகளால் நிலத்தில் கட்டிடம் கட்டவோ, ஆழ்துளை கிணறு அமைக்கவும் முடியாது என்பதால் நிலத்தின் மதிப்பு 75% வரை குறைகிறது. அரசால் வழங்கப்படும் இழப்பீடு வாழ்வாதாரத்துக்கு போதாது என விவசாயிகள் கூறுகின்றனர். இதையடுத்து விவசாயிகளும் எதிர்ப்பை தொடர்ந்து குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாரியம்மன் கோவிலை எடுக்கக் கூடாது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved