news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரியகுளத்தில் முதியோர் உதவித்தொகை திடீர் நிறுத்தம்?
tv

Also Watch

பெரியகுளத்தில் முதியோர் உதவித்தொகை திடீர் நிறுத்தம்?

வாழ்வாதார உரிமை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முதியோர் உதவித்தொகை

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான முதியவர்கள் தமிழக அரசு வழங்கி வரும் முதியோர் உதவித்தொகையைக் கொண்டுதான் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

​இந்நிலையில், எந்தவித முன் அறிவிப்புமின்றி இந்த மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை அரசு திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த 500-க்கும் மேற்பட்ட முதியவர்கள், தங்களது வாழ்வாதார உரிமையைக் கேட்கவும் மீண்டும் பதிவு செய்யவும், பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

​சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், உடல்நலக் குறைபாடுடைய முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அங்கு வந்த முதியவர்களுக்கு உதவிகளைச் செய்து தர வேண்டிய சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர்களோ, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அலுவலகக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர்.


​அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கால் முதியவர்கள் வெயிலில் வாடித் தவித்ததைக் கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை கைமீறிச் சென்றதால், தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவர்களை வரிசைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் முதியவர்கள் "நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உதவித்தொகையைப் பெற்று வருகிறோம். எந்தக் காரணமும் சொல்லாமல் திடீரென நிறுத்திவிட்டார்கள்.

நடக்கக் கூட முடியாமல், கைதுணையாக ஆட்களை கூட்டிக்கொண்டு பேருந்தில் ஏற சிரமப்பட்டு இங்கு வந்த எங்களுக்கு அதிகாரிகளின் அலட்சியமே பதிலா கிடைக்கிறது? இந்த உதவித்தொகையை நம்பிதான் எங்கள் உயிரே ஓடிக்கொண்டிருக்கிறது.

உங்களுக்கு வாக்களித்ததற்கு இதுதான் அரசு தரும் பரிசு நன்றிக்கடனா?" என முதியவர்கள் கண்ணீர்மல்க வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Link
பள்ளி மாணவி கொ* வழக்கு, பாலியல் வன்கொடுமை அம்பலம்

பள்ளி மாணவி கொ* வழக்கு, பாலியல் வன்கொடுமை அம்பலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு வருகிறது Apple Pay

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved