news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உண்மையை சொல்லுகிறேன்...
tv

Also Watch

tv

Read this

உண்மையை சொல்லுகிறேன்...

தஞ்சாவூர்

85

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ntk 3

உலக மகளிர் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா நமது நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டி
உண்மையாக சொல்லுங்கள்...
உலக மகளிர் தினம் வந்தவுடன் எல்லோரும் மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பெண்கள் குறித்து நிறைய அளவில் பாராட்டி எழுதுவார்கள் கொண்டாடுவார்கள், ஆனால் அதெல்லாம் தாண்டி பெண்களுக்கு உண்மையில் தேவைப்படுவது என்ன. பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பும், உண்மையான சுதந்திரமும், உண்மையான உரிமைகளும் கிடைக்கப் பெற்று இருக்கிறதா என்பதை இங்கு நாம் பார்க்க வேண்டும்..

பெண்களுக்கு சம இடங்களை கொடுத்தது நாதகதான்
ஏனென்றால் நான் நாம் தமிழர் கட்சியின் பாபநாசம் வேட்பாளராக இருக்கிறேன். இந்திய நிலப்பரப்பில் மட்டுமல்ல ஆசிய நிலப்பரப்பிலேயே ஒரு அரசியல் கட்சி சரிக்கு சமமாக பெண்களுக்கு 117-இடங்கள் பெண்கள், 117-இடங்கள் என சறுக்கி சமமாக இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசிய நிலப்பரப்பிலேயே தொகுதி வழங்கி உள்ள கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இதை சொல்வதற்கான தார்மீக கடமையும் உரிமையும் எனக்கு உள்ளது.

பெண்களுக்கு சம உரிமை இருக்கிறதா?
பெண்கள் குறித்து உயர்வாக பேசுகிறோம் நதிகளுக்கெல்லாம் பெண்களுடைய பெயரை வைத்திருக்கிறோம். கங்கா யமுனா என்ன உங்களுடைய பெயரை வைத்திருக்கும் அப்படி எல்லாம் பேசுகிறோம். ஆனால் பெண்கள் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் சரிக்கு சமமாக அமைந்திருக்கிறார்களா. 117-பெண்கள், 117-ஆண்கள் அமர்ந்து உள்ளார்களா. நாடாளுமன்றத்தில் அப்படி அமர்ந்திருக்கிறார்களா என்று பார்த்தால் இன்று வரை அது இல்லை.

பெண் விடுதலை குறித்து பேசுவது கேலிக்கூத்து
ஆனால் பெண் பிரதமரின் பெண் முதலமைச்சரை நாடு கொண்டிருக்கிறது. அது பெருமையாக இருக்கிறது. அதைத் தாண்டி சரிக்கி சமமாக பெண்கள் அமர்ந்திருக்கிறார்களா? என்றால் அது இல்லை.பொருளாதார விடுதலையும் அரசியல் விடுதலையும் ஒரு பெண் அடையாமல் ஒரு பெண் பொதுவெளிக்கு வராமல் அதனுடைய விடுதலையும் குறித்து பேசுவது கேலிக்கூத்தானது.
இப்போது வரை 33-சதவிகிதம் இட ஒதுக்கீடு போராடுகிறோம்
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான மசோதா இயற்றப்படும் போது கூட அதைப் பற்றி பேசுவதற்கு அங்கு பெண்கள் இல்லை. சட்டமன்றத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு பெண்கள் இல்லை. மாறாக ஆண்கள் பேசுகிறார்கள். ஆனால் ஒரு பெண் தானே பெண்ணுடைய உரிமையை பேச முடியும். பெண் தானே பெண்ணுடைய சிக்கலை புரிந்து கொள்ள முடியும். அப்படி என்றால் பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் சரிக்கு சமமாக பெண்கள் அமர வேண்டும். இப்போது வரை 33-சதவிகிதம் இட ஒதுக்கீடு போராடிக் கொண்டிருக்கிறோம். கெஞ்சி கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு மாநிலமும் போராடிக் கொண்டிருக்கிறது.

50-சதவீதம் இட ஒதுக்கீடு உயர்த்த வேண்டும்
ஆனால் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், இந்திய நிலப்பரப்பில் ஆண் வாக்கார்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம்.அப்படி இருக்கும்போது பெண்களுக்கும் 33-சதவிகிதம் அல்ல, 50-சதவீதம் இட ஒதுக்கீடு உயர்த்தி இந்த வரக்கூடிய 2026-தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்களுடைய கட்சிகளில் குறைந்தபட்ச 33-சதவிகித இட ஒதுக்கிடையாவது கொடுத்து பெண்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைத்துக் கொள்கிறேன்.

இதுதான் சரியான மகளிர் தின கொண்டாட்டம்
பெண்கள் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் செல்ல வேண்டும். இன்றைக்கு பெண் அரசியல் விடுதலை மற்றும் பொருளாதார விடுதலை அடைந்து அவளுக்கான உரிமைகளையும், அவளுக்கான தேவைகளையும் பேசுகிற அளவுக்கு பொது வழியில் முழங்குகிறார்களோ, அதுதான் சரியான மகளிர் தின கொண்டாட்டமாக இருக்க முடியும். மகளிர் தினம் என்பது உருவானதே வாக்குரிமைக்காகவும், கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியதற்காகவும் மகளிர் தினம் என்பது உருவானது.

பெண்களுக்கான சரியான வாய்ப்பை சம அளவில் கொடுங்கள்
அப்படி இருக்கும்போது மகளிர் தினத்தை எதற்காக கொண்டாடுகிறோம் என்பது தெரியாமல், பெண்களை நாங்கள் போற்றுகிறோம். பெண்களை நாங்கள் பெருமைமிக்கவர்களாக மாற்றுகிறோம் என்றால். பெண்களை நீங்கள் உண்மையிலேயே போற்றுகிறீர்கள் என்றால், பெண்கள் சிறந்தவர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்கள் என்றால், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான சரியான வாய்ப்பை சம அளவில் கொடுங்கள். அதுதான் ஒரு சரியான மகளிர் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

நாதக வேட்பாளர் அனீஸ் பாத்திமா வாழ்த்து
இந்த மார்ச்-08 லாவது பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பெண்களுக்கான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது. உலகப் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என உலக மகளிர் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் தெரிவித்தார்.

Related Link
நீங்கதான் இனி  எல்லாமே...

நீங்கதான் இனி எல்லாமே...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 27 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved