news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குவாரியில் வீசப்பட்ட சிறுவன் சடலம், கழுத்தறுத்து கொ*லப்பட்ட பயங்கரம்
tv

Also Watch

குவாரியில் வீசப்பட்ட சிறுவன் சடலம், கழுத்தறுத்து கொ*லப்பட்ட பயங்கரம்

குற்றவாளி பகீர் வாக்குமூலம்

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காணாமல் போன 4 வயது சிறுவன் குவாரி பள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது உறவினரான 18 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது. கள்ளத்தொடர்பு பகை அல்லது கஞ்சா போதையில் கொ*யா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சாக்கு மூட்டையில்...
மதுரை மாவட்டம், பாரபத்தி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் - நாச்சம்மாள் தம்பதியின் மூத்த மகனான 4 வயதான மோகன் திடீரென மாயமானதால், பதற்றமடைந்த பெற்றோர், கூடக்கோவில் காவல் லையத்தில் புகாரளித்தனர். இதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தேடியதோடு, தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, அதே ஊரை சேர்ந்த முருகனின் உறவினரான கிருஷ்ணன் என்பவரின் 18 வயதான மகன் மணி, இரவில் சாக்கு மூட்டை ஒன்றை தூக்கி சென்றதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வீட்டில் உறங்கி கொண்டிருந்த மணியை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

தனிப்படை போலீசார் விசாரணை
முதலில் மறுத்த மணி, பின்னர் 4 வயது சிறுவனை கொ* செய்து குவாரி பள்ளத்தில் உடலை வீசியதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார், அவனை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சாக்கு மூட்டையில் சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடப்பது தெரியவந்தது. உடனே, சிறுவனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னணியில் தகாத உறவு
தொடர்ந்து, மணியிடம் விசாரணை மேற்கொண்டதில், கொ* செய்யப்பட்ட சிறுவனின் தந்தை முருகன் குடும்பத்திற்கும் தனக்கும் பிடிக்காது என்பதால் கஞ்சா போதையில் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவனை கொ* செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், தனது பெரியப்பா மகளுக்கும், இறந்த சிறுவனின் சித்தப்பாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவர்களை பழிவாங்கும் நோக்கில் முருகனின் மகனான 4 வயது சிறுவன் மோகனை தனியாக அழைத்து சென்று கொ* செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

உண்மையான காரணம் என்ன?
தன்னுடைய வீட்டின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைக்கு சிறுவனை அழைத்துசென்று, அங்கு பிளேடால் கழுத்தை அறுத்து கொ* செய்துள்ளான். அதன்பிறகு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சிறுவனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி தோளில் சுமந்து சென்று, ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாரி பள்ளத்தில் போட்டுவிட்டு, எதுவுமே நடக்காதது போல வீட்டிற்கு வந்து படுத்து உறங்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், குற்றவாளி மணி மாறி மாறிப் பேசி வருவதால், கொ*க்கான உண்மையான காரணம் கஞ்சா போதையா அல்லது முன்விரோதமா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
ஏரியில் மிதந்த 4 சிறார்களின் உடல், உலகை விட்டு விடைபெற்ற உயிர்கள்

ஏரியில் மிதந்த 4 சிறார்களின் உடல், உலகை விட்டு விடைபெற்ற உயிர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் விமானியின் பின்னணி என்ன?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved