news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடையின்றி மீட்கப்பட்ட சடலம், செவிலியர் உயிரிழப்பில் சந்தேகம்
tv

Also Watch

ஆடையின்றி மீட்கப்பட்ட சடலம், செவிலியர் உயிரிழப்பில் சந்தேகம்

வேலைக்கு சென்ற உத்ராவுக்கு நடந்தது என்ன?

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காணாமல் போன இளம் செவிலியர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செவிலியர் சடலம் ஆடையின்றி மீட்கப்பட்டதாகவும், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமானதாகவும் கூறப்படுவதால், பாலியல் கொ*யா? அல்லது நகைக்காக கொ*யா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பெருந்துறை அருகே பெண் செவிலியர் கொ*லப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பமாக, நான்கு பவுன் தங்க நகைக்காக கழுத்தை நெரித்து கொன்றதாக உடன் பணியாற்றிய ஆண் செவிலியர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த உத்ராவுக்கும் ரஞ்சித் குமாருக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இருவரும், வேலைவாய்ப்புக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதிக்கு வந்தனர்.

உத்ரா தனியார் மருத்துவமனையில் செவிலியராகவும், ரஞ்சித் குமார் கடையிலும் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த 14ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற உத்ரா, பணி முடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு செல்லவில்லை.

வீடு திரும்பாத உத்ரா
உத்ரா வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, உத்ரா இரவு 7 மணியளவில் பணியை முடித்துவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து, விஜயமங்கலம் பேருந்து நிறுத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, உத்ரா காணாமல் போனது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சடலம் கிடைத்தது
இந்த சூழலில் தான், பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய இடத்தில் மரத்தடியில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது காணாமல் போன உத்ரா என்பது தெரியவந்தது.


தீவிர விசாரணை
பெண்ணின் சடலம் ஆடையின்றி மீட்கப்பட்டதாகவும், உத்ராவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், உத்ரா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொ* செய்யப்பட்டாரா, நகைக்காக கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

சிக்கிய குற்றவாளி
இந்நிலையில், 4 சவரன் நகைக்காக உடன் பணியாற்றி வந்த சரவணன் என்பவர் செவிலியர் உத்திராவை கழுத்தை நெரித்து கொ* செய்தது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து சரவணனை கைது செய்த தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 சவரன் நகைக்காக உடன் பணியாற்றி வந்த செவிலியரை கொ* செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
காப்பாளர் போர்வையில் கொடூரன், சிறுவனிடம் வன்புணர்வு

காப்பாளர் போர்வையில் கொடூரன், சிறுவனிடம் வன்புணர்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிரம்ப் மீது ஜெலன்ஸ்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved