news-tamil-logo

3/21/2026, 10:27:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடிசை அமைத்து இரவில் காவலில் இருந்த விவசாயி பலி
tv

Also Watch

tv

Read this

குடிசை அமைத்து இரவில் காவலில் இருந்த விவசாயி பலி

கே.குள்ளாத்திரம்பட்டி, தருமபுரி

Posted on: Jan 18, 2026 09:46 AM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன் வயது 70 விவசாயி. இவர் நேற்று இரவு பென்னாகரம் வனச்சரகத்தை ஒட்டி
உள்ள கே . குள்ளாத்திரம்பட்டியில் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் . மேலும் நிலத்தில் அவரை பயிரிட்டுள்ளார் .

அவரை உள்ளிட்ட பயிர்கள் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்கான நிலத்தில் குடிசை அமைத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தார் . இந்த நிலையில் அவரது நிலம்
வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு காட்டு யானை ஒன்று மகாராஜன் இரவு காவலில் இருந்த குடிசையை தாக்கி அதனுள் இருந்த மகாராஜனை ஒற்றை யானை தாக்கியுள்ளது .

இதில் மகாராஜன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் இந்த நிலையில் இன்று காலை வழக்கமான விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் மகாராஜன் இரவு காவலுக்கு பயன்படுத்திய குடிசை சேதம் அடைந்து மகாராஜன் இறந்த கிடப்பதை பார்த்தனர்.

உடனடியாக உறவினர்களுக்கும் பென்னாகரம் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு மகாராஜன் யானை தாக்கி இறந்த கிடந்தார்.

பின்னர் மகாராஜன் உடலை மீட்டனர். பென்னாகரம் வனத்துறையினர் ஒகேனக்கல் போலீசிற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று உடலை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மகாராஜனுக்கு மணிமேகலை என்ற மனைவியும் மாதையன் என்ற மகனும் உள்ளனர் யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி.

இதையும் படியுங்கள் : தனியார் டெலிவரி நிறுவன கிடங்கில் மீண்டும் தீ விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved