Also Watch
Read this
By: Web Team

தருமபுரி அருகே வீச்சரிவாளுடன் உணவகத்திற்குள் நுழைந்து வடமாநில இளைஞர்களை முதியவர் மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த முதியவர் அம்மாசி, மதுபோதையில் சக்திவேல் என்பவர் நடத்திவரும் உணவகத்திற்குள் புகுந்து, அங்கு பணிபுரியும் வடமாநில இளைஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், தான் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவன் எனவும், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved