news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கையும், களவுமாக சிக்கிய ஜோடி, 250 சவரன் நகை, வீடு போச்சு
tv

Also Watch

கையும், களவுமாக சிக்கிய ஜோடி, 250 சவரன் நகை, வீடு போச்சு

தவெக பிரமுகரால் உடைந்த குடும்பம்

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வெளிநாட்டில் இரவும், பகலுமாக உழைத்த பணத்தை எல்லாம் மனைவிக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஊர் திரும்பி வீட்டுக்கு வந்தபோது, மனைவியும் தவெக பிரமுகரும் ஒரே அறையில் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன், இருவரையும் வீட்டுக்குள்ளேயே பூட்டி போலீசில் பிடித்து கொடுத்துள்ளார்.

மேலும், தான் அளித்த புகாரின் மீது பள்ளிக்கரணை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கணவன் குற்றம் சாட்டியுள்ளார்.

2013ல் திருமணம்
சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவருக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த சித்திரை செல்வி என்பவருடன் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் மகேந்திரன்.

ஆனால், இங்கு குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டிய மனைவி சித்திரை செல்வியோ, கடந்த 2025ஆம் ஆண்டு தவெகவின் சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலாளராக பொறுப்பேற்றார். அரசியலுக்கு வந்த சில நாட்களிலேயே, அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கரணை தவெக பகுதி செயலாளர் முக்கேஷ் என்பவருடன் சித்திரை செல்விக்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஊர் சுற்றிய மனைவி
மகேந்திரன், சிங்கப்பூரில் இருந்து தான் வியர்வை சிந்தி உழைத்து அனுப்பி வைத்த பணத்தை எல்லாம் கரைத்து, முக்கேஷ் உடன் சேர்ந்து சித்திரை செல்வி ஊர் சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை, தெரிந்து கொண்ட கணவன் மகேந்திரன், கடந்த 2025 ஏப்ரல் மாதமே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

ஆனால், காவல் துறையினரோ சி.எஸ்.ஆர். ரசீதுடன் விட்டதோடு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மனம் உடைந்துபோன மகேந்திரன் நீதிமன்றத்தின் படியும் ஏறியுள்ளார்.

வீட்டிற்கு வந்த போது...
இந்த நிலையில் தான், சிங்கப்பூரிலிருந்து பள்ளிக்கரணை வீட்டுக்கு திடீரென வந்துள்ளார் மகேந்திரன். உள்ளே நுழைந்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தனது மனைவி சித்திரை செல்வியுடன், தவெக பகுதி செயலாளர் முக்கேஷ் வீட்டில் உல்லாசமாக இருந்ததை பார்த்து மகேந்திரன் கொதித்து போயிருக்கிறார்.

அவசர போலீஸ் 100க்கு அழைப்பு
அவரை பார்த்ததும் அலறியடித்துக் கொண்டு உள்ளே ஓடிய அந்த ஜோடி, சட்டென்று கதவை உள்ளேயிருந்து தாழிட்டு கொண்டது.

ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மகேந்திரன், சிறிதும் யோசிக்காமல் உடனடியாக வெளியே இருந்து வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு, அவசர உதவி எண்100க்கு போன் அடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், பூட்டப்பட்ட கதவை திறக்க வைத்து முக்கேஷை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய மகேந்திரன் கண்ணீர்மல்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.


250 சவரன் நகை, வீடு...
சிங்கப்பூரில் இரவும், பகலும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய அத்தனையையும், தனது மனைவியிடம் கொடுத்து ஏமாந்துவிட்டேன். தான் உழைத்து கொடுத்த 250 சவரன் தங்கம், வீடு, ஹாஸ்டல் மற்றும் சலூன் என அனைத்தையும் மீட்டு தர வேண்டும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் உள்ள முக்கேஷ் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால், பள்ளிக்கரணை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மகேந்திரன் வேதனையுடன் புகாரளித்துள்ளார்.

Related Link
TVK கொடியை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்? கைது

TVK கொடியை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்? கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐந்து நாட்கள் மிக கன மழைக்கு வாய்ப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved