Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம்பேருந்து நிறுத்தம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வெங்கடேஷ் என்பவர் வாடகைக்கு தேநீர் கடை நடத்தி வருகிறார். நிலையில் நகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை எனக் கூறி வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) சரவணன் என்பவர் வெங்கடேஷ் மனைவி அன்பரசியிடம் கேட்டுள்ளார் அப்போது அன்பரசியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட அன்பரசி அதிக அளவில் தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளார் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ள நிலையில் இதை தெரியாமல் வருவாய் ஆய்வாளர் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் வருவாய் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved