Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கிருஷ்ணாபுரம், அழகாப்புத்தூர், செம்மங்குடி என ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும்,
அவை ஒரு வார காலமாக பெய்த மழையில் நனைந்து வீணாவதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்த விவசாயிகள் நெல்மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved