Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியில் சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி, தனியார் பேருந்து மீது மோதி தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் ஆம்னி பேருந்து மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற போது, சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி மோதி தீப்பிடித்து எரிந்தது.
இதில் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved