Also Watch
Read this
By: Fyrose Banu

ராமநாதபுரத்தில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதுதான் வரலாறு என ராமநாதபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசினார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அந்த அடிப்படையில் ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, இந்த விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
எந்த கட்சி வெற்றி வருகிறதோ அந்தக் கட்சிதான்...
தொடர்ந்து விழாவில் பேசிய அவர் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் எந்த கட்சி வெற்றி வருகிறதோ அந்தக் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது தேர்தல் வரலாறு எனவும் எனவே இந்த முறை மீண்டும் திமுகவை வெற்றி பெறச் செய்ய ராமநாதபுரத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுககொண்டார்.
இந்த விழாவில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved