news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குளுக்கோஸில் கழிவறை தண்ணீர்? உயிரைக் காக்கும் இடத்தில் அலட்சியம்
tv

Also Watch

குளுக்கோஸில் கழிவறை தண்ணீர்? உயிரைக் காக்கும் இடத்தில் அலட்சியம்

நோயாளிக்கு நேர்ந்த அவலம்

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எலி மருந்து சாப்பிட்டு உயிருக்கு போராடி சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ திரவத்திற்கு பதிலாக கழிவறை குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கழிவறை நீரில்...
ஒரு பக்கம் குடும்பத் தகராறு, இன்னொரு பக்கம் எலி மருந்தை சாப்பிட்டு உயிருக்கு போராடிய இளைஞர், உயிரைக் காப்பாற்றும் என நம்பி அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு கழிவறை தண்ணீரில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

எலி மருந்தை சாப்பிட்டு...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர், குடும்பத் தகராறு காரணமாக புதன்கிழமை இரவு எலி மருந்தை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை நண்பர்கள் பெரியபாளையம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவறையில் இருந்து...
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குச் சென்றதும், லோகேஷுக்கு மூக்கில் டியூப் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத வகையில் குளுக்கோஸ் பாட்டிலில் மருத்துவ திரவத்திற்குப் பதிலாக, மருத்துவமனை கழிவறையில் உள்ள குழாயிலிருந்து ஜக்கில் தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றியதாக நோயாளி தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இங்கே இப்படித்தான்...
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லோகேஷும், அவரது நண்பர்களும் அதனை வீடியோவாக பதிவு செய்ததுடன், தூய்மைப் பணியாளரிடம் எதற்காக இப்படி தண்ணீரை ஊற்றுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு, ’இங்கே இப்படித்தான் நடக்கும்,’ என தூய்மைப் பணியாளர் அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

நர்ஸ் தான் கூறினார்
இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ், குளுக்கோஸ் பாட்டிலை கையில் ஏந்திக்கொண்டு, மருத்துவர்களையும் செவிலியர்களையும் தேடி விளக்கம் கேட்டு மருத்துவமனைக்குள் அங்கும் இங்கும் அலைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்போது பணியில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் தங்களது பணியை பார்த்துக்கொண்டு இருததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதைவிட அதிர்ச்சி, ’செவிலியர் தான் தண்ணீர் ஊற்றச் சொன்னார்; அதனால் தான் ஊற்றினேன்,’ என தூய்மைப் பணியாளர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுகாதார பணியாளர் பணி நீக்கம்
ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த லோகேஷ், பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், மருத்துவமனை சுகாதார பணியாளர் பழனி என்பவரை பணிநீக்கம் செய்து மருத்துவமனை தலைவர் பாலாஜி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், தூய்மை பணியாளர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் இனி ஈடுபடக் கூடாது என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Link
உயிரிழந்தவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

உயிரிழந்தவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

AI கட்டுப்பாடு, அமெரிக்க முதலீடு, பாதுகாப்பு விதிகள் | உலகளாவிய விவாதம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved