news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews லாரி- பைக் நேருக்கு நேர் மோதிய விபத்து
tv

Also Watch

tv

Read this

லாரி- பைக் நேருக்கு நேர் மோதிய விபத்து

மாதனூர், திருப்பத்தூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லாரி- பைக் விபத்து

மாணவனின் தாய், கதறி அழுத காட்சி : 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்கிற பிரதீப் (18) என்ற இளைஞர், குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், கடந்த 29 ஆம் தேதி அதிகாலை பிரதீப் தனது வீட்டில் இருந்து மாதனூருக்கு.

இருசக்கர வாகனத்தில், சென்றுள்ளார், அப்பொழுது அவ்வழியாக வந்த லாரி பிரதீப் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது, இதில் பலத்த காயமடைந்த பிரதீப்பை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரதீப் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

உடனடியாக பிரதீப்பின் உடலை ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து
குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில்,


விபத்து ஏற்பட்ட அன்று லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
மாதனூர் - உள்ளிச்சாலையில், அதிக அளவு சாலைகள் ஆக்கிரமித்துள்ளதால், இந்த விபத்து ஏற்படுள்ளதாக, மாணவனின், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை
முன்வைக்கின்றனர்.

மேலும் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவன், காயமடைந்த சாலையில் இருந்த போது, மாணவனை பொதுமக்கள் மீட்காமல், இருந்த போது, மாணவனின் தாய், கதறி அழுத காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
பேருந்துகள் நீண்ட நேரம் வராததால் பயணிகள் கடும் அவதி

பேருந்துகள் நீண்ட நேரம் வராததால் பயணிகள் கடும் அவதி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து 2-வது ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி...

0
2 hrs 41 mins agoshare
rcb 2026 winner








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved