news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 2 கிலோ மீட்டர் தூரம் நிற்கும் லாரிகள்...
tv

Also Watch

2 கிலோ மீட்டர் தூரம் நிற்கும் லாரிகள்...

திருவாரூர்

66

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr main 2

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 543 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல்முட்டைகள் தேக்கமடைந்து இருந்தன.


சென்னைக்கு செல்லும் 2016 மெட்ரிக் டன் நெல் முட்டைகள்
இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லாரிகள் மூலமாக நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ரயில் மூலமாக அரவைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் பேரளம் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலமாக 2016 மெட்ரிக் டன் நெல் முட்டைகள் இன்று சென்னைக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

நெல் மூட்டைகளுடன் அணிவகுத்து நிற்கும் லாரிகள்
அதனை ஒட்டி நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் மூலமாக ஏற்றிக்கொண்டு பேரளம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு நெல் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட உள்ள நிலையில் பேரளம் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகள் அனி வகுத்து நிற்கின்றன. தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்காத வண்ணம் உடனுக்குடன் லாரிகள் மூலம் ஏற்றி செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
கற்களை வீசி தாக்கிக் கொண்ட மது போதை கும்பல்

கற்களை வீசி தாக்கிக் கொண்ட மது போதை கும்பல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved