news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரண்டு முறை விலை உயர்ந்த ஆபரணத் தங்கம்
tv

Also Watch

இரண்டு முறை விலை உயர்ந்த ஆபரணத் தங்கம்

அதிர்ச்சி தந்த விலை ஏற்றம்

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, இரண்டு முறை விலை உயர்வை கண்டுள்ளது.
சென்னையில், நேற்று ஒரே நாளில் 3,000 ரூபாய் குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்தது.
சென்னையில், இன்று காலை அக்டோபர் 29ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89,680க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராமுக்கு ரூ.135 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,210க்கு விற்பனை ஆனது.
தமிழகத்தில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்படுகிறது. இந்த மாதம், 17ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 12,200 ரூபாயாகவும், ஒரு சவரன், 97,600 ரூபாயாகவும் அதிகரித்தது. கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக். 27) ஒரு கிராம், 11,450 ரூபாய்க்கும், ஒரு சவரன், 91,600 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (அக். 28) காலை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு, 150 ரூபாய் குறைந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு, 1,200 ரூபாய் சரிந்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று பிற்பகலில், மீண்டும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 11,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 88,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 165 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு, 3,000 ரூபாய் குறைந்தது.
இந்நிலையில், இன்று காலை (அக். 29) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89,680 ஆக இருந்தது. 
ஒரு கிராமுக்கு ரூ.135 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,210க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.166க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து, மீண்டும் அதிர்ச்சி தந்துள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகலிலும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வைக் கண்டது.
இதன்படி,
ஒரு கிராம் - ரூ.11,325
ஒரு சவரன் - ரூ.90,600 (+2,000)

மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை | Today Gold Rate | Chennai Gold Rate Update

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாட்டின் எப்ஸ்டீன், ஜெம் வீரமணி சிக்கியது எப்படி?

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved