Also Watch
Read this
By: Manigandan Raja

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் அமைந்துள்ள மலை நம்பிக்கோயிலும் ஒன்றாகும். சின்ன திருப்பதி என்றழைக்கப்படும்
இக்கோயிலில் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு உறியடி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. தொடர்ந்து சங்கிலி பூதத்தார் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக சங்கிலியால் அடித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

தொடர்ந்து சிறுமிகளின் கும்மி ஆட்டம் பாட்டத்துடன் உறியடி உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved