news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரம்பூரில் களம் காணும் விஜய்?
tv

Also Watch

பெரம்பூரில் களம் காணும் விஜய்?

பெரம்பூர் வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

63

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என தவெகவின் முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், வடசென்னையை விஜய் குறி வைப்பது ஏன்? திமுகவின் கோட்டையை கைப்பற்ற விஜய் திட்டமிட்டுள்ளாரா? என்பது குறித்து அலசி ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

* தேர்தலில் தனித்து களம் காணும் தமிழக வெற்றிக் கழகம்
* தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைக்குமா?
* விஜய் எங்கு களம் காண உள்ளார்?


தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலம், ஒரே நாளில் இந்தியா முழுவதும் லைம்லைட்டுக்கு வந்திருந்திருக்கிறது பெரம்பூர் சட்டமன்ற தொகுதி.
சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, ஒவ்வொரு நாளும் பல அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம். குறிப்பாக, கன்னி தேர்தலில் தனித்து களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், தேர்தலில் விஜய் எங்கு களம் காண உள்ளார்? என தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

* பெரம்பூரில் தவெகவின் முதல் செயல்வீரர்கள் கூட்டம்
* பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட போவதாக அறிவித்த ஆதவ்


தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக, சென்னையில் நடைபெற்ற தவெகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, பெரம்பூர் தொகுதியில் தான் விஜய் போட்டியிட போவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எப்போது கர்ப்பிணி மீது கை வைத்தார்களோ? அன்றைய தினமே வடசென்னையில் தான் போட்டியிட வேண்டும் என விஜய் முடிவெடுத்து விட்டதாக அதற்கான காரணத்தையும் கூறினார் ஆதவ் அர்ஜூனா.

* ”எப்போது கர்ப்பிணி மீது கை வைத்தார்களோ அன்றே முடிவெடுத்த விஜய்”
* 90களில் இருந்தே திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக உள்ள சென்னை


90களில் இருந்தே திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக சென்னை இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொடங்கி தற்போது வரை அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் சென்னையில் போட்டியிட தயக்கம் காட்டி வரும் நிலையில், திமுகவின் கைக்குள் இருக்கும் வடசென்னையை பறிக்கவே விஜய் வடசென்னையில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. இதே காரணத்தை முன்னிறுத்தி கூட்டத்தில் பேசிய ஆதவ், பல ஆண்டுகளாக வட சென்னையை ஒதுக்கி, திமுக செய்த சூழ்ச்சியை முறியடிக்கவே பெரம்பூரில் விஜய் போட்டியிடுவதாக கூறினார்.

அதுமட்டுமின்றி எங்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு குறைவாகவும் போதை புழக்கம், குற்றச் சம்பவங்கள் அதிகமாகவும் உள்ளதோ, அந்த தொகுதியில் தான் போட்டியிடுவேன் என விஜய் பலமுறை கூறியதாக சுட்டிக்காட்டிய அவர், வடசென்னையை ரவுடிசம் நிறைந்த பகுதியாக மாற்றிய திமுகவை, அங்கிருந்து விரட்டியடிக்க விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் முன் மொழிந்தார்.

* திமுகவின் கைக்குள் இருக்கும் வடசென்னையை பறிக்க விஜய் முடிவு?
* வடசென்னையை சிங்கப்பூர் போல் மாற்ற பெரம்பூரில் போட்டியிட வேண்டும்
* ஆதவ் அர்ஜூனா கொண்டு வந்த தீர்மானத்தை வழி மொழிந்த புஸ்ஸி ஆனந்த்


ஆதவ் அர்ஜூனா கொண்டு வந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழி மொழிந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியானதாக சொல்லப்படுகிறது. 1991 மற்றும் 2016 தவிர மற்ற அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பெரம்பூர் தொகுதியில் திமுக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நிலையில், அதனை வரும் தேர்தலில் தன் வசப்படுத்தி திமுகவுக்கு விஜய் அதிர்ச்சி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Link
யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனடா பிரதமர் அறிவிப்பு அமெரிக்க அதிபர் கண்டனம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved