புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
- ஈரானில் 7.5 லட்சம் கோடி கன அடி கொண்ட புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- இதுகுறித்து பேசிய ஈரான் அமைச்சர் மோசென் பாக்னிஜாத், பார்ஸ் மாகாணத்தில் இந்த புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணெய் வயலில் இருந்து 5.7 லட்சம் கோடி கன அடி எரிவாயுவை பிரித்தெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். இதனால், ஈரான் நாட்டின் வளர்ச்சிக்கான செலவுகள் மற்றும் செயல் திட்டத்திற்கு ஆகும் செலவுகள் குறையும் என தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகம் புதுப்பிப்பு
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதை புனரமைக்க பாகிஸ்தான் அரசு நிதியுதவி வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததில் பஞ்சாப் மாகாணம் பஹாவல்பூரில் இந்த மார்க்கஸ் சுபான் அல்லாஹ் முகாமும் ஒன்று. தற்போது, இந்த முகாம் பளிங்கு கற்கள் கொண்டு சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் பூசப்பட்டு, புதியதாக குவிமாடமும் கட்டப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் குடும்பத்துடன் கொடூர கொலை
- வங்கதேசத்தில் ஓய்வுபெற்ற ஹிந்து ஆசிரியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரங்பூர் மாவட்டம் தாஸ்பாரா பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி
- சக்ரவர்த்தி, மனைவி பிரிதிலா, மகள் ஆகமி, மகன் பிரியம் சக்ரவர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார்.

- இவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் முக்தா தாஸ், சிப்பார்த்தா தாஸ் ஆகியோர், அவரது வீட்டின் மாடியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை கணபதியும், அவரது குடும்பத்தினரும் தட்டிக் கேட்டதால் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.