Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் பேட்டி
அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உலக நாடுகள் தங்களின் வெற்றியை அங்கீகரித்துள்ளதாகவும், அதேநேரம், அமெரிக்கா அனைவராலும் வெறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளதால், இந்த போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட்டம்
நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தர்ஷனா படேல், ஆஷ் கல்ரா ஆகியோர் கொண்டு வந்த தீர்மானத்தில், தீபாவளி பண்டிகை, உலகின் மிக பழமையான பண்டிகைகளில் ஒன்று எனவும்.

இது குடும்பங்கள், நண்பர்கள், சமூகத்தினரை ஒன்றிணைத்து தாராள மனப்பான்மை, ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் பண்டிகை என தெரிவித்துள்ளனர். மேலும், மகிழ்ச்சி நிறைந்த இந்த கொண்டாட்டத்தில் கலிபோர்னியா மக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved