news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா மறுப்பு
tv

Also Watch

75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா மறுப்பு

குடிமக்களுக்கு விசா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப் விதித்த தடையை ரத்து செய்த நீதிமன்றம்

அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு விசா வழங்குவதற்கு டிரம்ப் அரசு விதித்திருந்த தடையை நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த இந்த கொள்கை மூலம் ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, தாய்லாந்து மற்றும் ஏமன் உள்பட 75 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை அமெரிக்க நிறுத்தி வைத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், இது சட்டத்திற்கு புறம்பானது எனவும், இந்த உத்தரவை வெளியிட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறியுள்ளதாகவும் தெரிவித்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட ராஜதந்திர வழிகளை பயன்படுத்த வேண்டும் என 70-க்கும் மேற்பட்ட பிரிட்டன் எம்பிக்கள் ஐநாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸுக்கு எழுதிய கடிதத்தில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தகவல் தொடர்புகளை மீட்டெடுத்து உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தடையற்ற விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அமைதி, கண்ணியம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பெற ஐ.நா தனது தலையீடுகளை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

போலீஸ் ரோந்து வாகனம் மீது மற்றொரு கார் மோதி விபத்து

பிரிட்டனில் போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மற்றொரு கார் நேருக்கு நேர் மோதியதில் 2 போலீஸார் உட்பட 7 பேர் பலியாகினர். மிட்ல்ஸ்பரோ அருகே சந்தேகத்திற்கிடமான காரை போலீஸார் ரோந்து வாகனத்தில் விரட்டிச் சென்றனர்.

அப்போது, எதிரே தவறான திசையில் வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், ரோந்து காரில் காரில் இருந்த 2 போலீஸாரும், மற்றொரு காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்ததும் 14 ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Related Link
வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை வாங்கிய மார்க் ஜூக்கர்பெர்க்

வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை வாங்கிய மார்க் ஜூக்கர்பெர்க்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விலை உயரும் கார்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved