Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூருக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய சேலம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நெல்லையை வீழ்த்திய மதுரை அணி
டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் நெல்லை கிங்ஸை 72 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 126 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா - இலங்கை கடைசி டெஸ்ட் போட்டி
இந்தியா , இலங்கை இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன்செய்ய இலங்கையும் போராடும் என்பதால் போட்டிக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved