Also Watch
Read this
By: Manigandan Raja

கார் விலை ரூ.20,000 வரை உயரக்கூடும் எனத் தகவல்
மாருதி, டாடா கார் நிறுவனங்களை போன்று ஹூண்டாய் நிறுவனமும் விலை உயர்வை கையில் எடுத்துள்ளது அதன்படி வரும் செப்.1-ஆம் தேதி முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களின் விலையும் 1% வரை அதாவது ரூ.20,000 வரை உயரக்கூடும் எனத் தகவல்.
பஜாஜ் நிறுவனம் தனது புதிய தலைமுறை மாடல்களை வரும் 24-ஆம் தேதி சந்தைகளில் களமிறக்கவுள்ளது
பஜாஜ் நிறுவனம் தனது மிகவும் பிரபலமான பல்சர் 125 மற்றும் 150 பைக்குகளின் புதிய தலைமுறை மாடல்களை வரும் 24-ஆம் தேதி சந்தைகளில் களமிறக்கவுள்ளது இந்த முறை டிசைன் மாற்றங்கள் மட்டுமின்றி, புதிய பிளாட்ஃபார்ம், புதிய ஃப்ரேம், மோனோஷாக் சஸ்பென்ஷன், புதிய இன்ஜின் மற்றும் நவீன வசதிகள் என பல முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

'Simple Wave' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் தனது ‘Simple Wave' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ரூ.1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரை விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்கூட்டரின் அவுட்டர் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved