news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகர் தனுஷ், நடிகை கரீனா கபூர் நடிக்கும் புதிய படம்

பேச்சுவார்த்தை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகர் தனுஷ்

இயக்குநர் பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் புதிய இந்தி படம்

நடிகர் தனுஷ், நடிகை கரீனா கபூர் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என இயக்குநர் பிஎஸ் மித்ரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், புதிய இந்தி திரைப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்ததை நடந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தயாரிப்பு நிறுவனத்திடம் இது குறித்து பேசி வருவதாகவும் தெரிவித்தார். இந்த படத்தை ஒரு பெரிய புராண சாகச கதையாக உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செப். 1-ம் தேதி முதல் தமிழ் திரைப்படம் வெளியிடுவதில்லை

செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் நடைபெற்ற சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் வெளியாகும் படங்களை 8 வாரம் கழித்தே ஓடிடியில் வெளியிடுவோம் என கடிதம் கொடுத்தால்தான் தியேட்டரில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்களை விநியோகஸ்தர்கள் நிர்பந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

விநியோகஸ்தர்கள் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு தயாரிப்பாளர்களை அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும் எனவும், ஆலோசனையின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்க முடியாது எனவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசு மரியாதையுடன் சௌகார் ஜானகி உடல் தகனம்

வயது மூப்பால் காலமான பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சவுகார் ஜானகி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடல் வீட்டில் வைத்த நிலையில், ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Related Link
நடிகர் அர்ஜுன் ராம்பால் 54-வது வயதில் 2-வது திருமணம்

நடிகர் அர்ஜுன் ராம்பால் 54-வது வயதில் 2-வது திருமணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காய்கறி வேனில் குட்கா பொருட்கள் கடத்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved