news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகர் அர்ஜுன் ராம்பால் 54-வது வயதில் 2-வது திருமணம்

கேப்ரியெல்லா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அர்ஜுன் ராம்பால்

மாடல் அழகி கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸை மணந்தார்

நடிகர் அர்ஜுன் ராம்பால் தனது 54-வது வயதில் மாடல் அழகி கேப்ரியெல்லாவை ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் குறித்து இந்த ஜோடி தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவொரு புகைப்படத்தையோ அல்லது அறிவிப்பையோ வெளியிடாத நிலையில், வடகோவா பார்தேஸ் துணை பதிவாளர் சூரஜ் வெர்னேகர், திருமண செய்தியை வெளியிட்டுள்ளார்.

இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த தம்பதிக்கு அரிக், அரிவ் என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அர்ஜுன் ராம்பாலுக்கு முதல் மனைவி மூலம் மஹிகா, மைரா என 2 மகள்கள் உள்ளனர்.

நடிகர் துல்கர் சல்மானின் "ஐ ஆம் கேம்" திரைப்படம்

நடிகர் துல்கர் சல்மானின் "ஐ ஆம் கேம்" திரைப்படத்தின் வெளியீட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது. நஹால் ஹிதாயத் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 20-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 3-ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், வெளியீட்டு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

"மிடில் கிளாஸ் மாப்பிள்ளை" படம் விரைவில் வெளியீடு

90ஸ் கிட்ஸ்களின் பரிதாப நிலையை விளக்கும் "மிடில் கிளாஸ் மாப்பிள்ளை" திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீதுள்ள தீராத காதல் காரணமாக, இந்த புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

90ஸ் கிட்ஸின் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண் கிடைப்பதில் சந்திக்கும் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை, நகைச்சுவை மற்றும் எதார்த்தமான சுவாரசியங்களுடன் இந்த படம் உருவாகிறது.

Related Link
வரலாற்று சாதனைப் படைத்த

வரலாற்று சாதனைப் படைத்த "தி ஒடிஸி" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காய்கறி வேனில் குட்கா பொருட்கள் கடத்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved