Also Watch
Read this
By: Manigandan Raja

நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏ வாசுதேவனூர் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் சரியாக குடிநீர் வரவில்லை என புகார் கொடுத்தும் நீங்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
வீட்டுக்கு வீடு குடிநீர் பைப் மட்டும் போட்டு உள்ளீர்கள் ஆனால் அதில் குடிநீர் வரவில்லை எதற்காக அந்த பைப் போட்டீர்கள் எப்பொழுது தண்ணீர் வரும் பள்ளியில் சுற்றுச்சூழல் அமைப்பதற்கு 100 ஆட்கள் மேல் பில் போட்டு எடுத்தீர்களா இல்லையா நல்லா இருந்த சமையல் அறையை இடித்துவிட்டு பாத்ரூம் கட்டி நான்கு வருடங்கள் ஆகிறது அதை திறந்தீர்களா?

இதற்கும் பில் எடுத்தீர்களா என சரமாரியாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து வரவு செலவு கணக்குகளை பொதுமக்களிடையே வாசித்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved