Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 520 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம் சர்க்கார், கண்ணாடி புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று முதல் அடுத்த 80 நாட்களுக்கு அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved