ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பணத்தை கேட்ட மனைவியின் மண்டையை கணவன் அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி பானுப்பிரியா. இவர் அரசு சார்பில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டு செலவிற்கு கேட்டதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாரிமுத்து கட்டை மற்றும் கத்தியால் தாக்கியதில் பானுப்பிரியா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.