news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுதந்திர தினத்தை ஒட்டி திருவாலீசுவரர் கோயிலில் வழிபாடு
tv

Also Watch

சுதந்திர தினத்தை ஒட்டி திருவாலீசுவரர் கோயிலில் வழிபாடு

பொது விருந்து

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமைச்சர் சம்பத் குமார்

அம்பத்தூர் பாடியில் உள்ள அருள்மிகு திருவலீசுவரர் திருக்கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி இந்து சமய அறநிலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பிற்படுத்தோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி. பாலமுருகன் ஆகியோர் சிறப்பு வழிபாட்டில் கலந்து பொதுமக்களுடன் பொது விருந்தில் பங்கேற்றனர். பின்னர் பொது விருந்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்,


சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நடத்திட்ட உதவிகளை வழங்கினேன். முதலமைச்சர் கோட்டையில் கொடியேற்ற வேண்டும் என மக்கள் விரும்பினார்கள் அவர்களின் விருப்பம் இன்று நிறைவேறி உள்ளது.

வறுமையை ஒழிக்கும் விதமாக பொசு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நிறைந்த நமது மாநிலத்தில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல்
திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையும். அமைச்சர்கள் ஒரு மதம் சார்ந்த பேசுவது சர்ச்சையாகி வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தால் அமைச்சர்,
அவரவர் மதத்திற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியது அவர்களின் ஜனநாயக கடமை,அவர்களின் நம்பிக்கையில் நாம் தலையிடக்கூடாது.

என்னுடைய நம்பிக்கையில் அவர்கள் தலையிடக்கூடாது.சமத்துவம், சமதர்மம் என பேசக்கூடியவர்கள் மதம் சார்ந்து பேச மாட்டார்கள் என நினைக்கிறேன். மற்றவர்களின் உரிமையில் நாம் உள்ளே
புகுந்து தடை சொல்லாத வரை எதுவும் சரியாக இருக்கும் என நம்புகிறோம்.மத நம்பிக்கையை திணிப்பது தான் தவறு நம்பிக்கை என்னோடு வைத்திருப்பது தவறில்லை எனக் கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருத்தேரோட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved