திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், தங்க முலாம் பூசப்பட்ட இரும்பு காப்பை, தங்கம் எனக்கூறி 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டு கம்போடியா நாட்டிற்கு தப்பி சென்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேவராஜ் என்பவர் நடத்தி வரும் அதிஷ்டா கோல்டு கம்பெனிக்கு கடந்த ஒன்றாம் தேதி வந்த விஜய் என்பவர் நான்கு சவரன் என கொடுத்த காப்பை வாங்கிக் கொண்டு, அவரது ஆவணங்களை சரிபார்த்து கடை ஊழியர் பிரகாஷ் பணம் கொடுத்துள்ளார். அதனை உருக்கும்போது இரும்பு என தெரியவந்த நிலையில், சிசிடிவு பதிவுகளுடன் பிரகாஷ் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், நகையை விற்ற ஒரு வாரத்தில் விஜய் கம்போடியா சென்றது தெரியவந்தது.