Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் சட்டவிரோதமாக கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டிவனம் சிப்காட் தொழிலாளியான லட்சுமணன் என்பவர், பணியை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க கரும்பு தோட்டம் அருகே அவர் சென்றதாக கூறப்படும் நிலையில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved