news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home health ஆண்களை தாக்கும் ப்ராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? யாருக்கெலாம் வரும்?அதப்பத்திதான் இந்த பதிவுலப் பார்க்கப்பொரோம்..!
tv

Also Watch

tv

Read this

ஆண்களை தாக்கும் ப்ராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? யாருக்கெலாம் வரும்?அதப்பத்திதான் இந்த பதிவுலப் பார்க்கப்பொரோம்..!

ப்ராஸ்டேட் புற்றுநோயின்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prostate cancer

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் உறுதியாகியிருப்பதா நாம கேள்விப்பட்ருப்போம்.
மருத்துவ ஆய்விதழான `லான்செட்` கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த ஓர் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவல தெரிவிச்சிருக்கு.

மேலும், கடந்த

2020ஆம் ஆண்டில் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்ததாகவும்  இது 2040ஆம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்றும் லான்செட் அறிக்கை வெளிவந்துருக்கு.

மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இந்த அறிக்கையில் சொல்லப்படுது.மேலும்,கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில் 3,75,000 ஆண்கள் ப்ராஸ்டேட் புற்றுநோயால் இறந்துள்ளதாகவும் ,எதிர்வரும் 2040ஆம் ஆண்டில் இந்த இறப்புகள் 85% அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களில் மொத்தம் 3% பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவங்கதான்.மேலும் ஒவ்வோர் ஆண்டும் 33,000 முதல் 42,000 பேர் வரையில் புதிதாக ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுறதா ஆய்வுகள் சொல்லுது. லான்செட் அறிக்கையின்படி, ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கும் 4 முதல் 8 பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ள அதே வேளையில், தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்புகள் 30% அதிகரிச்சிருக்கு.

`ப்ரோஸ்டேட்` என்பது என்ன....எதனால் இந்த ப்ரோஸ்டேட் cancer..ஆண்களுக்கு வருது..னு பார்க்கலாம்.

` ப்ரோஸ்டேட்` என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் அமைஞ்சிருக்கு. இது பார்ப்பதற்கு வால்நட் அளவில் இருந்தாலும் வயது ஆக ஆகப் பெரிதாகுது....ப்ராஸ்டேட் உறுப்பின் அளவு அதிகரிக்கத் துவங்கும்போது ​​மருத்துவர்கள் பி.எஸ்.ஏ சோதனையைப் பரிந்துரைக்கிராங்க.இந்த ஆய்வுக்குப் பிறகுதான் கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, முடிவுகளின்படி சிகிச்சையும் துவங்கப்படுது.


ஆண்களுக்கு 45-50 வயதிற்குப் பிறகு ப்ரோஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் அல்ல என்கிறார்கள்மருத்துவர்கள். மேலும், எல்லா ஆண்களும் இந்தச் சிக்கலை எதிர்கொள்வது இல்லை.


அடிக்கடி சிறுநீர் கழித்தல்,இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது,சிறுநீர் தானாக வெளியேறுதல்,சிறுநீரில் ரத்தப்போக்கும் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பாக
பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துக் கொள்ள அரிவுறுத்துறாங்க மருத்துவர்கள்....


புற்றுநோய் கண்டறியப்பட்டு, அது உடலில் பரவியிருந்தால், புற்றுநோய் எலும்புகளுக்கு சென்று முதுகு வலி,எலும்பு முறிவு,எலும்புகளில் வலி ஏற்படுமாம்.


ப்ரோஸ்டேட் புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்றும், பெரும்பாலான ஆய்வகங்களில் இந்த வசதி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ப்ரோஸ்டேட் உறுப்பு விரிவடைந்தால், இமேஜிங், அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகியவையும் செய்யப்படும்.

ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பகுதி அகற்றப்படும் என்றும், ஆனால் புற்றுநோயின் நிலை தீவிரமடைந்தால் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியின் நிலையைப் பார்த்த பிறகுதான்,அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் சொல்ராங்க.


மேலும், ​​“புற்றுநோய் புரோஸ்டேட் சுரப்பியில் மட்டுமே இருந்தால், ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பதாகவும் இது அவர்களின் ஆயுளை 10-15 ஆண்டுகள் நீட்டிக்கிறது. ஆனால் அது எலும்புகளுக்குப் பரவினால் அது சிக்கலானது, மேலும் அதற்கான சிகிச்சை வேறு விதமானது," சொல்ராங்க மருத்துவர்கள்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
22 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved