Also Watch
Read this
By: Manigandan Raja

Carewell Aviation நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வங்கி கணக்குகள் மூலம் 160 கோடி ரூபாய்க்கும் மேல் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், கொல்கத்தாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். Carewell Aviation நிறுவனத்தின் வளாகம் மற்றும் அதன் இயக்குநர்களின் இல்லங்கள் மற்றும் ஒரு தேர்தல் அறக்கட்டளை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
கனமழையால் டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்

கனமழை காரணமாக குருகிராமில் உள்ள டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக, வாகனங்கள் 8 முதல் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. நர்சிங்பூர் பகுதியில் நெடுஞ்சாலையின் முக்கிய வழித்தடத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, குருகிராம் போலீஸார் வாகனங்களை ராஜீவ் சௌக், ஹீரோ ஹோண்டா சௌக் வழியாக துவாரகா எக்ஸ்பிரஸ்வேக்கு திருப்பி விட்டனர்.
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மீது அரசியல் பிரமுகர் தாக்குதல் :

மகாராஷ்டிராவில் ஷிண்டே பிரிவு சிவசேனாவை சேர்த்த பிரமுகர் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தாக்கிய சிசிடிவி காட்சி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தானே மாவட்டம் தொம்பிவிலியில் உள்ள KDMC அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.