Also Watch
Read this
By: Manigandan Raja

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக தடை :
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கம் செய்தது. உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யாவுக்கு நெருக்கடி தரும் விதமாக, அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என அதிபர் டிரம்ப் எச்சரித்து வந்தார். அந்த வகையில், 19 நிறுவனங்கள் மற்றும் 2 தனிநபர்கள் உட்பட 21 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறை செயலாளரின் பதவிகாலம் நீட்டிப்பு :

வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிகாலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிகாலம் வரும் 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், 2027 ஜூலை 14-ம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை பதவி நீட்டிப்பு செய்யப்படுவதாக அமைச்சரவையின் நியமனக்குழு அறிவித்துள்ளது. இவர், கடந்த 2024 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த உயர்நிலைக் குழு :

மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்ய பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உயர்நிலைக் குழு விரைவில் பயணிக்கவுள்ளது. இதையொட்டி, இக்குழுவினர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, குழுவினரின் பயணங்களுக்கு தேவையான உதவிகளை செய்துதரும்படி உயரதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டார்.