Also Watch
Read this
By: Manigandan Raja

ஜப்பான் பிரதமருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு :
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி 3 நாட்கள் இந்திய சுற்றுப்பயணமாக தலைநகர் டெல்லியை வந்தடைந்தார். அவரை, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். இன்று டெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், தகாய்ச்சியும் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
பின்னர், தலைவர்கள் இருவரும், பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பின்போது இரு தரப்பிலும் 10 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பால் புதிய அடையாளம் :

டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பால் உலக அரங்கில் புதிய அடையாளம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பால் நாட்டின் ஒவ்வொரு முனையிலிருந்தும் உருவெடுக்கும் இளம் தொழில்முனைவோர், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர்கள், இந்த பூமி எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்கு ஆளாகி 30 நாட்கள் சிறை அமைச்சர்களின் பதவி தானாகவே பறிபோகும் :
குற்றச்சாட்டுக்கு ஆளாகி 30 நாட்கள் சிறையில் இருக்கும் அமைச்சர்களின் பதவி தானாகவே பறிபோகும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் திருத்தங்களுக்கு பின் மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.