news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசுப் பள்ளி
tv

Also Watch

tv

Read this

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசுப் பள்ளி

பேர்ணாம்பட்டு, வேலூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பள்ளி கட்டிடம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6முதல் 12ம் வகுப்பு வரை ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை ஓங்குப்பம் செல்லும் சாலையில் அரசு நிதி ஒதுக்கி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டு
இதில் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்பு கூடுதல் பள்ளிக்கட்டிடம் ஆய்வுக்கூடங்கள், மற்றும் கணினி வகுப்பறைகள், கருத்தரங்க கூடம் சத்துணவு கூடம், உள்ளிட்டவை கட்டப்பட்டு பயன்படுத்தி வந்தனர்

நாளடைவில் இந்த பள்ளி பராமரிப்பு பணி செய்யாததால் சட்ட விரோத செயல்களும் சமூக விரோதிகளில் கூடாரமாகவும் பள்ளிகட்டிடம் மாறியது பல லட்சம் நிதி செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களில் உள்ள இரும்பு கம்பிகள் கதவுகள் ஜன்னல்கள் மின்மோட்டார்கள், விலை உயர்ந்த ஆய்வக பொருட்கள் மது பிரியர்கள் அவ்வப்போது திருடிச் சென்று மது அருந்தி வருகின்றனர்.

சீட்டு கட்டுகள் மது பாட்டில்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்திவிட்டு பள்ளி வளாகத்திலேயே வீசி செல்கின்றனர். மேலும் இந்த பள்ளி கட்டிட வகுப்பறைகளில் சிலர் இயற்கை உபாதைகளை கழித்து விட்டுச் சென்றுள்ளனர்

இதனால் பள்ளி வளாகம் முழுவதும் முள்செடி வளர்ந்து பாம்பு பூரான் தேள் லிட்டர் விஷ பூச்சிகளின் இருப்பிடமாகவும் குப்பைகள் நிறைந்து காட்சி அளிக்கிறது பகல் மற்றும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் பள்ளி கட்டிடத்தில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கடந்த ஆட்சியில் மாவட்ட நிர்வாகத்திற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் பலமுறை பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தும் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தராத நிலையில் தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசு இந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Link
போலியோ சொட்டு மருந்து முகாமில் வீடியோ எடுத்த விவகாரம்

போலியோ சொட்டு மருந்து முகாமில் வீடியோ எடுத்த விவகாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டுக்கோட்டை அரசு பள்ளி தலைமையாசிரியர் மீது அவதூறு

0
17 mins agoshare
சாலை மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau