news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கணிப்பு
tv

Also Watch

tv

Read this

கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கணிப்பு

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தம்

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் வியாழனன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ளியன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், அடுத்த 2-3 நாட்களில், மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

ஜூலை 3ஆம் தேதி
கோவை மாவட்ட மலைப் பகுதிகள்
நீலகிரி
தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை

ஜூலை 4ஆம் தேதி
கோவை
நீலகிரி
கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை

ஜூலை 5, 6ஆம் தேதிகளில்
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்காக...
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதி, மத்திய வங்கக்கடலின் சில பகுதி, அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளிக் காற்று, அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Link
திமுக உடனான கணக்கு வழக்கை தீர்ப்போம் என ஆதவ் அர்ஜூனா உறுதி

திமுக உடனான கணக்கு வழக்கை தீர்ப்போம் என ஆதவ் அர்ஜூனா உறுதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசுப் பள்ளி

1
56 mins agoshare
பள்ளி கட்டிடம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau