Also Watch
Read this
By: Manigandan Raja

3 வீரர்கள் மீட்பு: மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம் :
அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் அரபிக் கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டதில் 3 வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான ஒருவரை தேடி வருகின்றனர். MH-60S சீஹாக் ஹெலிகாப்டர் USS ஜார்ஜ் H.W. புஷ் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து அப்பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த விபத்து பகை நடவடிக்கையால் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நள்ளிரவு 11.27 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு 11.27 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 173 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.