news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை வெளியீடு
tv

Also Watch

tv

Read this

ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை வெளியீடு

இஷான் கிஷன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இஷான் கிஷன்

முதலிடத்தில் இருந்த அபிஷேக் சர்மா 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார் :

ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில், 876 புள்ளிகளுடன் இஷான் கிஷன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். முன்பு முதலிடத்தில் இருந்த அபிஷேக் சர்மா 869 புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பாகிஸ்தானின் சாஹிப்சதா ஃபர்ஹான் 848 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். மேலும் இந்தியாவின் திலக் வர்மா 6-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 8வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணி 189 ரன்கள் குவித்த நிலையில் திடீர் மழை :

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி தொடர்ந்து பெய்த இடைவிடாத மழை காரணமாக கைவிடப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்திருந்தது.

கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 47 பந்துகளில் 68 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 59 ரன்களும் எடுத்தனர். ஆல் ரவுண்டர் சிவம் துபே 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். இந்தியா பேட்டிங் செய்து முடித்ததுமே திடீரென தொடங்கிய மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் நடுவர்கள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

Related Link
காங்கோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

காங்கோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அறிவாலயத்தின் டிஜிட்டல் ஆபரேசன், திமுகவின் 'ஆகஸ்ட் அறிக்கை' பிளான்

2
6 mins agoshare
திமுகவின் 'ஆகஸ்ட் அறிக்கை' பிளான்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau