Also Watch
Read this
By: Manigandan Raja

2-1 என்கிற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி :
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் காங்கோ அணியை 2-க்கு 1 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் அடித்ததின் மூலம் காங்கோ அணி 0-க்கு 1 என முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணி கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. இந்த சூழலில், ஆட்டத்தின் 2-வது பாதியில் இங்கிலாந்து அணி 75 மற்றும் 86-வது நிமிடங்களில் 2 கோல்கள் அடிக்க 2-க்கு 1 என இங்கிலாந்து வெற்றி பெற்றது.
சோகத்தில் முடிந்த கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டம் :
மெக்சிகோவில் நடைபெற்ற கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் 19 வயது இளம்பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணி, 2-க்கு 0 என்கிற கோல் கணக்கில் ஈகுவடார் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியை மெக்சிகோ நகரத்தின் பிரசித்தி பெற்ற ஏஞ்சல் ஆஃப் இன்டிபென்டன்ஸ் பகுதியில் சுமார் 14 லட்சம் ரசிகர்கள் திரண்டு கொண்டாடினர். அப்போது, கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 19 வயது இளம்பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மற்றொரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா முன்னேற்றம் :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னரும், 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லருடன் மோதிய சபலென்கா 6-க்கு 1, 7-க்கு 6 என்கிற செட் கணக்கில் வெற்றிபெற்றார். அதேபோல, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் போர்ச்சுக்கலை சேர்ந்த நியூனோ போர்ஜஸை எதிர்கொண்ட ஜானிக் சின்னர் 7-க்கு 6, 7-க்கு 6, 6-க்கு 4 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.